கொரோனா: நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வார்டாக மாறியது!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
vathaka maiyam

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தொற்று வார்டுகள் நிரம்பிவிட்ட நிலையில், புதிதாக தொற்று பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாத நிலையில், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை தொற்று வார்டாக மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 600 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் சிறிய அளவிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு 60-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.