கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… செவிலியருக்கு கொரோனா உறுதி! பரபரப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur medical college - 2026

கரூரில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

கரூர் நகரில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 3 மாவட்டங்களைச் சார்ந்த கரூர் கொரோனா மண்டலத்தில், திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை அளிக்கும் மையமான, கரூரை அடுத்த காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதுவும் கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டில் பணியாற்றும் ஒரு செவிலியருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மற்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடையே தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும், கரூரில் முதன்முறையாக அரசு  மருத்துவக் கல்லூரியில் அதுவும் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் ஒரு செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.