சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞன்!

Published:

vankodumai 1 1

கோவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், தேரம்பாளையத்தில் வசித்து வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சிறுமியை அடிக்கடி வெளியே அழைத்து சென்று ஆசை வார்த்தைகள் கூறி ,தனிமையில் இருந்துள்ளார் சிவலிங்கம்.

சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமியிடம் கேட்டதற்கு சிவலிங்கம் தான் காரணம் என கூறியுள்ளார்.

இதனால் பெற்றோர் சிவலிங்கத்திடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு சிவலிங்கத்தின் பெற்றோர் சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று திருமணம் நடைபெற்றுவதாக இருந்தது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

சிறுமியின் திருமணம் குறித்து கேள்விப்பட்ட மருத்துவ நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் கூறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் சிறுமிக்கு திருமணம் நடப்பது உறுதியானது. இதனால் துடியலூர் காவல்த்துறையில் சிவலிங்கம் மீது புகார் கொடுக்கப்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிவலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறுமியை திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img