மாநகர பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதி 10 பேர் காயம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம் அடைந்தனர்.

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள கண்ணகி நகரில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பதையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.இதனால், தாறுமாறாக ஓடிய பேருந்து சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 10 பயணிகளுக்கு லேசான காணம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

செய்தி: கே.சி. சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.