
புதுதில்லி : ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய அரசை குடிமக்களே வழி நடத்துகின்றனர் என்று பேசினார்.
இந்நிலையில், மோடியின்பேச்சுக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீங்கள் பேசிய பேச்சு ஆடம்பரமான பேச்சு என்றும், மோடி உங்களுக்கு எதிராக இந்தியா எழுகிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Modi Ji, those were some fancy power point slides. A quick word of advice:
You’re right about Rising India. One small issue – it’s rising against you. #News18RisingIndia
— Rahul Gandhi (@RahulGandhi) March 16, 2018
எழுச்சியுறும் இந்தியா என்பது குறித்து ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசிய போது, பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் மத்திய அரசின் அர்ப்பணிப்பு செயல்படுகளால், இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் பேசினார்.



