
மதுரையில் வங்கிகள் முன்பு மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், குறைவான அளவு டீக்கடைகள் திறந்திருக்கின்றன. அது போல், .ஹோட்டல்களும் குறைந்த அளவே திறந்திருக்கின்றன.
மதுரை நகரில் திங்கள்கிழமை அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியதால்… சிறிய நகை கடைகள், மின்சாதன பொருட்கள், சிறிய ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இருந்த போதிலும் மதுரை அண்ணாநகர், கே.கே.நகர், பாண்டிகோயிவ் பி.பி.குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை போலீஸாரின் கெடுபிடியால் திறக்க யோசித்தனர்.

பேக்கரிகள், காய்கறி, பழங்கள், பலசரக்கு கடைகள் வழக்கம் போல செயல்பட்டன.மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் பகுதிகளிலும் போலீஸாரின் கட்டுப்பட்டால் டீக்கடைகளை திறக்க பலர் யோசித்தனர்.

மேலும், திறந்த டீக்கடைகளில் பார்சல் மட்டும் என்பதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது… மதுரை அண்ணாநகர், கோமதிபுரம் அரசு வணிக வங்கிகள் முன்பு திங்கள்கிழமை காலை நீண்ட வரிசை காணப்பட்டது. மக்கள் இடைவெளி விட்டும், மாஸ்க் அணிந்தவர்களை மட்டுமே வங்கிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். ஆனால் சாலையில் நின்றவர்களோ கட்டுப்பாடு ஏதுமின்றி அருகருகே நின்று உள்ளே சென்றனர்.

பேன்சி கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகளின் விலையில் இன்று ஏற்றம் காணப்பட்டது. பூக்கடைகள் யாவும் இன்று வழக்கம் போல திறந்து செயல்பட்டன.

மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதி கடைகள் முன்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்கள் வாங்குவோரை போலீஸார் கண்டித்தனர். பல வங்கிகள் முன்பாக வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டதால் வரிசையாக வங்கிக்குள் இடைவெளி விட்டு அனுப்பப்பட்டனர். மக்கள் கூட்டம் சாலையில் மிகுந்து காணப்பட்டது.
செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை