கொரோனா: சரியாயிடுச்சு வீட்டுக்கு போங்க.. மூன்றே நாளில் வீட்டுக்கு அனுப்பியவர் மரணம்! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

Raja-Subramanian-1

கொரோனா பாதிப்பால் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர் 3 நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட அவர் நேற்று திடீரென உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன் (49). அங்கு ஸ்வீட் ஸ்டால் மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்புடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் சோர்வடைந்து சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்றதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை கடந்த 8ம் தேதி மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது உடல் நிலை மோசமானதால் அன்றிரவே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் வழங்கப்பட்ட இறப்பு விவரத்தில் கொரோனா சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கொரோனா பாசிட்டிவ் என சேர்க்கப்பட்டு 3 நாட்களில் குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், மீண்டும் உடல் நலக்குறைவால் தென்காசி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இவருக்கு மனைவியும், கல்லூரியில் படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ”கடந்த 2ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடையம் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.

அவர்களது அறிவுரைப்படி 3ம் தேதி தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என உறுதியானது. ஆனால் அவரை 6ம் தேதி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 8ம் தேதி மதியம் தென்காசி அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு மயக்க நிலையில் பாதிப்பு இருந்ததால் அவர்களே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கொரோனா இல்லை என்று 3 நாட்களில் திருப்பி அனுப்பி விட்டு இறந்த பின்னர் கொரோனா சந்தேகம் என சான்று கொடுத்துள்ளனர். இது மருத்துவ சிகிச்சை குறைபாட்டையே காட்டுகிறது. குடும்பத் தலைவனை இழந்த அவரது மனைவி, குழந்தைகள் தவிக்கின்றனர் என்றனர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories