தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

Published:

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மணலை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது. தமிழகத்தின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img