3 நாளாக பேசாத காதலி! விரக்தியில் இளைஞர் தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
manikanden-1
manikanden-1

சென்னையில் விஜய் மணிகண்டன் என்பவர் தனது காதலி 3 நாள் பேசாத காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடியில் விஜய் மணிகண்டன் என்பவர் தன் காதலி தன்னிடம் 3 நாள் பேசாத காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி முதல் தெருவை சேர்ந்தவர் குருநாதன் இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார் இதில் மூத்த மகன் விஜய் மணிகண்டன் வயது 20 என்ற நபர் சென்னை ஐசிஎப்பில் கூலி வேலை செய்து வருகிறார்,

manikanden1
manikanden1

இவர் ஆந்திராவில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது அந்தப் பெண் கடந்த மூன்று நாட்களாக விஜய் மணிகண்டனிடம் பேசவில்லை என மனவருத்தத்தில் வேலைக்கு செல்லாமல் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் முதல் தளத்தில் புடவையால் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நீண்ட நேரம் கழித்து விஜய் மணிகண்டனின் உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து சென்னை எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய் மணிகண்டனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.