தென்காசியில் காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை
deadbody
deadbody

காய்ச்சல் ஏற்பட்டதால் சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதில் முகில் செல்வன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் முகில் செல்வதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காய்ச்சல் அதிகமானதால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.