அநியாயம்.. ஆபாசம்.. பிஷப் ஹீபர் கல்லூரி காம பேராசிரியர் பால் சந்திரமோகன் லீலைகள்!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் திருச்சி
tritchi - 2026

தனியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளது திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்துறை தலைவர் மீது, அதே துறையில் பயிலும் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த்துறை மாணவிகள், 5 பக்கத்திற்கு பாலியல் புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த புகாரில், தமிழ்த்துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில், தங்களுடன் மிகநெருக்கமாக வந்து அமர்ந்து கொள்கிறார் என்றும்,

வகுப்பு நேரத்தில் பக்கத்தில் சொல்லிக் கொடுப்பது போல் அமர்ந்து கொண்டு கால்களால் தங்களைச் சுரண்டுவதாக்வும், இரட்டை அர்த்தத்தில் பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும், ஆடையை தளர்த்தி, தொடர்ந்து பல்வேறு சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியரின் இந்த செயல்களுக்கு அதே துறையில் பணியாற்றும் பெண் உதவி பேராசிரியரும் ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இவர்களது செயலால், தாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் மாணவிகள் தங்களது மனுவில் கூறியுள்ளனர்.

பலமுறை நிர்வாகத்தில் புகார் அளித்தும் நிர்வாகம் பெரிதாக ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல் ஹாஸ்டல் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்‌. மேலும் உதவி பேராசிரியரை வர்ணித்து கவிதை பக்கம் பக்கமாக எழுதி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

ஆசிரியர் இராஜகோபலான் விஷயத்தில் கொதித்த ஊடகங்கள் இந்த செய்திகளை போடவும் இல்லை. விவாதம் நடத்தவுமில்லை. அதிர்ச்சி ஆபாசம் அக்கிரமம் என தலைப்புகள் தூள் பறக்கவுமில்லை.

இராஜகோபால் குற்றத்திற்கு பள்ளியையே குற்றம் சாட்டி அரசு கையகப்படுத்த எழுந்த குரல்கள் இக்கல்லூரியின் நிர்வாகத்தை கண்டித்து அரசு கையகப்படுத்த வேண்டுமென குரலாவது ஒலிக்குமா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

பல பெண்ணியவாதீகள் எனக்கூறிக் கொள்ளும் பெண் எம்பி முதல் யாரும் இதற்கு வாய் திறவாது இருப்பது ஓட்டு அரசியலுக்கு என்பது கேள்வியாக அல்ல பதிலாகவே தெரிகிறது.‌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.