புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், புதுவை உள்பட பல்வேறு இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவாராம். இந்நிலையில் வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தாராம். அப்போது அய்யனாரிடம் ரூ.40 ஆயிரம் பணத்தைக் கொடுத்து மிஷன் வீதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது கணக்கில் செலுத்தும்படி கூறி அனுப்பிவைத்துள்ளார். அதன்படி அய்யனார் வங்கியில் பணத்தைச் செலுத்திய போது, வங்கி காசாளர் அதில் 36 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருப்பதை அறிந்தார். நூறு ரூபாய் நோட்டுகள் பத்தும், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 27ம் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பெண்மணி தன்னிடம் பணத்தைக் கொடுத்தனுப்பியதைக் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாடிக்கையாளர் தனக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். இது கள்ளநோட்டு என்று தெரியாமல் வாங்கி விட்டதகவும், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், போலீஸார் சுரேசை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கும் கள்ள நோட்டு குறித்த விவரத்தைக் கொடுத்துள்ளனர்.
கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

