தீ விபத்துக்கு சிவன் பார்வதியின் கோபமே காரணம் என்கிறார் மதுரை ஆதினம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம் என்கிறார்  மதுரை ஆதினம்.

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கிழக்கு கோபுரம் அருகே ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சுமார் மூன்று மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து மதுரை ஆதினம் அளித்த பேட்டியில், இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து கோயில் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம். கோயில் நிர்வாகத்தை செல்வந்தர்களிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டும். எதற்கு பணம் என்ற நிலையை இனியாவது கோயில் நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.