திருச்சுழி அருகே பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு..

Published:

IMG 20220807 WA0063 - 2026
                
திருச்சுழி அருகே விடத்தகுளம் கண்மாயில் பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் விடத்தகுளம் கண்மாயில் இளைஞர்கள் குளித்தபோது கண்டெடுத்த 6 விதமான தெய்வங்களின் கற்சிலைகள், வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில்  ஒப்படைக்கப்பட்டன.

              விடத்தகுளம் கிராம கண்மாயில் சனிக்கிழமை மாலை இளைஞர்கள் சிலர் நீச்சலடித்தும், நீரில் மூழ்கியும் குளித்துக் கொண்டிருந்தனராம்.அப்போது அவர்களது கைகளில் ஏதோ சிற்பங்கள்போன்று தட்டுப்பட்டதால் கிராம நிர்வாக அதிகாரி மூலம் திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக அவர் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அக்கண்மாய்நீரில்  மூழ்கியநிலையில் இருந்த   பல தெய்வச்சிலைகளைக் கண்டெடுத்து வெளிக்கொண்டு வந்தனர்.அவற்றை வட்டாட்சியர் ஆராய்ந்ததில் தலா ஒன்றரை அடி உயரத்தில்  கருப்பணசாமி சிலை மற்றும் அம்மன் சிலை ஆகியனவும்,மேலும்  தலா 2 அடி உயரம்கொண்ட  3 நாகர் சிலைகளும், சுமார் 3 அடி உயரத்தில் பிரதான அம்மன் சிலை ஒன்றும்  (அம்மன் சிலையின் தலைப்பகுதி இல்லை) என, கல்லாலான மொத்தம் 6 சுவாமி சிலைகள் என கண்டறியப்பட்டன.எனவே வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் அச்சிற்பங்கள் அனைத்தும் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில்  ஒப்படைக்கப்பட்டன.
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img