திமமுக., இதுதான் கமலின் கட்சிப் பெயராம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

கமல்ஹாசன் துவங்க உள்ள கட்சிக்கு “திராவிடர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயர் சூட்ட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியல்  களத்தில் குதித்துள்ள நடிகர் கமலஹாசன் என்று புதிய கட்சி தொடங்குகிறார். இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளன.

புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் ‌அடியெடுத்து வைக்கும் அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பதாக உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.

இன்றைய அவரது திட்டம் குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

இரண்டுநாள் பயணமாக மதுரை சென்றுள்ள கமல்ஹாசன், நேற்று பகல் ஒருமணி அளவில் மதுரை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், தனது வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் இருப்பதாக கூறினார்.

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிரே உள்ள திடலில் கமல்ஹாசனின் கட்சி பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையின் பின்புறம் பிரம்மாண்டமான எல்இடி சுவர் அமைக்கப்படுகிறது. விளக்கு அலங்காரப் பணிகள், பார்வையாளர் அமரும் இடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் என பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இன்று மாலை 5 மணிக்கு கட்சி பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் கமல்ஹாசன், 6 மணி அளவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.

இந்தக் கூட்டத்தில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

8.50 மணி அளவில் அங்குள்ள திருமண மண்டபத்தில் மீனவர்களை சந்திக்கும் கமல், 11 மணி அளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்

இதனைத்தொடர்ந்து மதுரை வரும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில், பரமக்குடி ஐந்துமுனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசுகிறார்.

மதுரையில் மாலை 5 மணி அளவில் தொடங்கும் கட்சியின் முதல் கூட்டத்தில் ‌பங்கேற்று கமல்ஹாசன் தனது ‌கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.