பாதாள அறையில் ஆயிரக் கணக்கில் உடல்கள்; அரசுக்கு தெரியுமா என பண்ருட்டி வேல்முருகன் கேள்வி

சென்னை:

சேவை மையம் ஒன்று விற்பனைக்காக மனித உடல்களை ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைத்துள்ளது குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? ஏன் நடவடிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“என்ஜிஓ அதாவது சேவை மையம், அரசியலுக்கும் வந்துவிட்டது. காரணம் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் வெளிநாட்டுக் கரன்சிதான்.

பெயர்தான் சேவை மையம்; ஆனால் நடப்பதோ வர்த்தகம் அது எந்த வர்த்தகமாகவும் இருக்கலாம்;வகைதொகையற்ற ’பணம்’ வர்த்தகத்தின் மூலம்தானே சாத்தியம்!

அதனால்தான் யாருமே செய்யாத, போட்டியே இல்லாத மைய வர்த்தகத்தை அதாவது பிண வியாபாரத்தைத் தேர்வு செய்திருக்கிறார் தாமஸ்!

கேரளாவைச் சேர்ந்தவரான இந்த தாமஸ், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக தன் சேவை மையத்தை நடத்திவருகிறார்.

ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதித்தோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தன் சேவை மையத்தில் வைத்து பராமரித்துவருகிறார். இந்த சேவை மையத்துக்குள் வந்த அவர்கள் பிறகு எப்போதுமே வெளியே செல்ல முடியாது என்று தெரியவருகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இது புகாராக எழுந்து, 2015ல் காஞ்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி அந்த சேவை மையத்தைக் கள ஆய்வு செய்தார். அப்போது இறந்த மனித உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டுவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்தச் சடலங்கள் எதற்கும் மருத்துவ ஆவணங்களோ முறையான சான்றிதழ்களோ இல்லை.

சேவை மையம் எச்சரிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டது. 2017 செப்டம்பரோடு சேவை மையத்தின் உரிமம் முடிவுக்கு வந்தது; அதற்குப் பிறகும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் அது இயங்குவது தெரிந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த 20-ம் தேதியன்று காலை 11 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு அந்த சேவை மையத்திற்குச் சொந்தமான ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரு மூதாட்டி, ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’என்று அலறிக்கொண்டே சென்றார். அதைப் பார்த்த பைக்கில் சென்ற இளைஞர் பிரபு அந்த ஆம்புலன்சை மறித்தார்.

அதன் ஓட்டுநர் ராஜேஷுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேஷுக்குத் துணையாக மேலும் பொதுமக்கள் அங்கு வந்து கூடினர். அந்த மூதாட்டியை விசாரித்து, ஆம்புலன்சையும் சோதனை செய்தனர்.மூதாட்டி திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பதும் அது போலியான ஆம்புலன்ஸ் என்றும் தெரிந்தது.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

ஆம்புலன்சின் உள்ளே சுயநினைவில்லாத நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும் இருந்தார். அவர் அருகே ஒரு சடலம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. காய்கறி மற்றும் அரிசி மூட்டைகளும் இருந்தன. அந்த சடலத்துக்கும் எந்த ஆவணமும் சன்றிதழும் இல்லை.

பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து காவலர்களிடம் ஆம்புலன்சை ஒப்படைத்தனர். இந்தச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்து பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையம் முன் கூடினர். சேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைத்தான் கலைந்துபோகச் சொன்னது. மக்கள் மறுக்கவே, தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது காவல்துறை. அதோடு ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்தார் என்று சொல்லி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞரைப் பிடித்துக் காவலில் வைத்தது.

இதை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞரை விடுவிக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறையினர் அவர்களை அவமதித்து, அவர்களின் செல்போன்களையும் பறித்து, மூவரையும் செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்று, உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

குற்றம் செய்தவர்களை விடுத்து புகார் கூறியவர்களையே பொய்வழக்குப் போட்டுச் சிறையிலடைத்த இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக அவர்களை விடுதலை செய்திட வலியுறுத்துகிறது.

உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கப்படாமல் சேவை மையம் என்று நடத்தும் தாமஸ், ’1590 உடல்கள் பாதாள பிண அறையில் உள்ளதாக’ ஊடகத்திற்கு பேட்டியே அளித்துள்ளார்.

அப்படியிருக்க, பிணக்குவியலால் காற்று மாசுபட்டுச் சுற்றுச்சூழல் பாதித்துச் சுகாதாரம் சீர்கெட்டு நோய்கள் பரவும் ஆபத்திற்கு என்னதான் நடவடிக்கை?

இறந்தவர்களின் உடல் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories