December 5, 2025, 9:54 PM
26.6 C
Chennai

பொய் வழக்கில் மதுரை இந்து முன்னணியினர் கைது: 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

hindu munnani - 2025
மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை
விடுதலை செய்யக்கோரி 21.3.2019 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கையில்…
இந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன.
சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர்.
இச்சட்டவிரோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.

மதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்ட விரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

உண்மையில் நடந்தது இதுதான். அப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர்.

கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.

மதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்?

இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை.

ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.

ஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

– என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளாார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories