சென்னை: மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேசியிருக்கிறார். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு என்று முழக்கமிட்டனர். அது வேற வாய் என்றால் இப்படி பேசுவது என்ன வாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்..:
மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேச்சு – நம்புங்கள்…… இவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறியவர்கள்!
மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேச்சு – ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு என்று முழக்கமிட்டது வேறு வாய் என்றால் இப்படி பேசுவது என்ன வாய்?
மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேச்சு – ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு என்று முழக்கமிட்டது வேறு வாய் என்றால் இப்படி பேசுவது என்ன வாய்?
— Dr S RAMADOSS (@drramadoss) March 20, 2018