தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று மிகவும் காட்டமாகக் கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தமிழக அரசு மீதும் கடும் காட்டத்துடன் பேட்டி அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வந்து அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த திமுகதான் இந்த 13 பேர் கொலைக்கு காரணமானவர்கள். கொலைகாரர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். போராட்டத்தில் கலந்த விஷமிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்தில் திமுகவிற்கு நடமாடுவதற்கும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தலைகாட்டுவதற்கும் அருகதை கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், பத்திரிகையாளர்களே உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் ; உங்களை காப்பாற்றுவதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், திமுக, காங்கிரஸ் போன்ற கொலைகார கட்சிகளை கொண்டாடக்கூடிய விநோதம் தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று கூறினார் அவர்.
13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகதான் காரணம்; கொலை செய்தவர்கள் காங்கிரஸ் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொய்யான போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதி வழங்கியது…
தூத்துக்குடி மக்கள் மத்தியில் பாஜக குறித்த தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக மீதான உள்நோக்கம் கொண்ட பிரசாரங்களை தூத்துக்குடி மக்கள் நம்ப வேண்டாம்… ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர காங்கிரஸ், திமுக, அதிமுகவே காரணம் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.




