பொன். ராதாகிருஷ்ணன் ஒரு பாஜக., தொண்டர்தான்! அவருக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை: ஆர்.பி.உதயகுமார்!

Published:

udayakumar
udayakumar

பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தொண்டர் தான் கூட்டணி குறித்த அவரின் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில்… தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது, ஊரடங்கு காலங்களில் கூட விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு மட்டுமே தடையின்றி நடைபெற்றது! அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது,

தன்னிகரில்லா அதிமுகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவாகியுள்ளார்! திராவிட இயக்க வரலாற்றில் எளிய விவசாயான தமிழக மக்களின் விசுவாசியாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் வேட்பாளராக அறிவித்த வர்தா புயலை விரட்டிய துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்!

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து அதிமுக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்!

விசுவாத்துடன் உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பு உண்டு என்பது தான் அதிமுகவின் எண்ணம், சாமானியர்கள் சரித்திரம் படைக்கலாம் என்பது தான் அதிமுகவின் பலம்! இதை பலவீனமாக நினைப்பது எதிர் அணியினரின் தவறு.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

40ஆண்டுகள் பொது சேவையாற்றும் மோடி அவர்களே எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டிய நிலையில் ஸ்டாலின் அவர்கள் குறை கூறுவது போல ஸ்டாலின் பழைய பல்லவியே பாடிவருகிறார்

பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தொண்டர் தான் அவர் கருத்து குறித்து சொல்வதற்கு பதில் தேவையில்லை எனவும், அதிமுக கூட்டணி குறித்து பல கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கருத்து சொல்லலாம் ஆனால் தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.

தமிழ்மொழி உரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் எனவும், தமிழுக்காக மாநாடு நடத்தியவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மட்டும் தான் தமிழுக்ககாக மாநாடு நடத்தியவர்கள் மற்றவர்கள் எதற்காக மாநாடு நடத்தினார்கள் என்பது தெரியும்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவின் முன்னோடியாக உருவாகிவருகிறது, தமிழகத்தில் கொரோனா எத்தனை கட்டங்களாக வந்தாலும் தமிழக அரசு எதிர்கொள்ள தயாராகவுள்ளது, கொரோனா வைரஸ் ஊரை விட்டு போகவில்லை இங்கு தான் சுற்றிகொண்டு இருக்கிறது பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

மதுரை மண்டலம் மீதான கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் இருவர் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர், அதிமுகவில் தூக்கி எறியப்பட்டவர்கள் தான் சென்ற தலைமையை தூக்கி பிடித்துவருவதை கண்டுகொள்ள கூடாது, அரசியல் என்ற பொதுவாழ்வில் துரோகம் சூழ்ச்சி நெருக்கடி இருக்கும் எதிர்த்து போராடி வெல்ல வேண்டும் எனவும், எடப்பாடியின் செயல்பாடுகளை கண்டு அனைத்து தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்,

அம்மாவின் ஆன்மா மற்றும் பயிற்சியை அடையாளமாக ஏந்தி தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img