சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்குப் பின் ஒத்திவைக்க வேண்டும் என்ற மாறன் சகோதரர்களின் கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவி.,க்கு பிஎஸ்என்எல்., அதிவேக அகன்ற அலைவரிசைக் கற்றை இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வெளிநாடுகளிலிருந்து ஜூலை இறுதியில்தான் வருகின்றனர் என்றும், எனவே விசாரணையை ஜூலை மாதத்துக்குப் பின் ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
ஆனால், இந்த வழக்கு ஏற்கெனவே நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.





மாறன௠சகோதரரà¯à®•ளà¯à®•à¯à®•௠அவரà¯à®•ளின௠விரà¯à®ªà¯à®ªà®ªà¯à®ªà®Ÿà®¿ வாயà¯à®¤à®¾ தீரà¯à®ªà¯à®ªà¯ à®à®©à¯ ?