தியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை

kadambur raju complaint - 2026

தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வணிகத்தை நஷ்டப் படுத்த்தி வருகிறார்கள்.

இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த பிபரவரி மாதம் ரிலீசான ‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலியும், மே மாதம் ரிலீசான ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லமும் அமைச்சரைப் பார்த்து மனு கொடுக்க தீர்மானித்தனர்.

கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் ‘மனுசனா நீ’ படம் திருடப்பட்டதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர், கரூர் எல்லோரா தியேட்டர் ஆகிய இரண்டு தியேட்டர்களில் ‘ஒரு குப்பைக் கதை’ திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் மீதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர் மீதும் கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. விரைவில் கரூர் எல்லோரா தியேட்டர் மீது வழக்கு பாய உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று தக்க நஷ்டஈடு கிடைக்கவும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு தியேட்டர்களிலிருந்து திருட்டு நடக்காமலிருப்பதற்கும் இந்த இரண்டு தயாரிப்பாளர்களும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுக்களைப் பெற்று விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத் தரவும், உறுதியான நடவடிக்கை எடுத்து பைரஸியை ஒழிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.