திருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்

Published:

theatre nayanthara - 2026

கிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தை திருட்டு விசிடியாக வெளிட்ட திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. புராஜக்டரை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத் சீனி தயாரிப்பில் உருவான கோலிசோடா 2 திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் படம் திரைக்கு வந்த சில நாட்களில் இந்த படத்தின் திருட்டு விசிடிக்கள் சந்தைக்கு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் பரத் சீனி இது தொடர்பாக உரிய ஆவனங்களுடன் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் இடம் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து விசாரணை நடத்திய திருட்டு வீடியோ தடுப்பு பிரிவினர் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் வெளியான சிடியில் கிருஷ்ணகிரியில் உள்ள நயன்தாரா என்ற திரையரங்கு வாட்டர்மார்க் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஆய்வாளர் தாரணி தலைமையிலான போலீசார் திரையரங்கிற்கு வந்து புரஜெக்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஒளிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் திரையரங்கு ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img