சென்னை: மறைந்த திமுக,. தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சதுக்கத்தின் அருகே மெரினாவில் அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடியது திமுக.,
அதற்கு ஏற்ப இரவே நீதிபதி இது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரிப்பதாக கூறி, இன்று காலை முதல் விசாரணை நடைபெற்றது. அப்போது, மெரினாவில் சமாதி அமைக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை 5 பேரும் வாபஸ் பெற்றனர். இதனால், திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைவதற்கான தடை நீங்கியதாகக் கூறப்பட்டது. முடிவில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஐந்து மனுக்களில் ஒன்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் மனு. அவரும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், தாம் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றும், தமது மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, நீதிபதியே ஒரு முடிவை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.
இது குறித்து ஒரு பத்திரிகை ஆசிரியர் பேசிய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், நீதிபதி குலுவாடி பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு சொல்லியுள்ளார். இது குறித்து CBI விசாரணைக்கு கொண்டு செல்வேன் என்று டிராபிக் ராமசாமி கூறுகிறார்.





இநà¯à®¤ செயà¯à®¤à®¿ உணà¯à®®à¯ˆà®¯à®¾ ? அநà¯à®¤ ஆடியோவில௠உளà¯à®³à®¤à¯ உணà¯à®®à¯ˆà®¯à®¾ ?