சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை : நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுகள் விவரம் :

அப்துல் கலாம் விருது – சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்‌ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது.

சிறந்த துறை : தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல் பரிசுக்கு பதிவுத்துறையும், 2வது பரிசுக்கு உணவுத்துறையும், 3வது பரிசுக்கு சுகாதாரத்துறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சி : கோவில்பட்டி, கம்பம், சீர்காழி

சிறந்த பேரூராட்சி : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தேனி – பழனிசெட்டிபட்டி 2வது பரிசும், தர்மபுரி – பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.

கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை – பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img