செங்கோட்டையில் செப்.30 வரை 144 தடை உத்தரவு நீடிப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

police station sengottai - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,செங்கோட்டை முனிஸ்பாலிட்டி , 2,புதுார் டவுண் ஷிப், 3,பண்பொழி டவுண் ஷிப், மற்றும் 4,வல்லம், 5,பிரானூர் பார்டர், 6,பெரிய பிள்ளை வலசை , 7,கற்குடி, 8,புளியரை, 9,சுமை தீர்த்தபுரம், 10,தெற்கு மேடு, 11,தேன் பொத்தை, 12,கணக்கு பிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் 22.09.2018 காலை 6.00 மணி முதல் 30.09.2018 காலை 6.00 வரை crpc சட்ட பிரிவு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இக்காலங்களில் வன்முறை தூண்டும் நோக்கத்தோடோ சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடோ பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது ,

மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்கூறிய நோக்கத்திற்காக ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது

போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வெளி ஊர்களில் இருந்தோ வெளி மாவட்டங்களில் இருந்தோ ஆட்களோ தலைவர்களோ அதற்காக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களோ இவ் ஊரில் வருவதற்கும் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.