மக்கள் கோபத்தை வெளிப்படுத்திய மாப்பிள்ளையார்குளத்தில் இன்று நிவாரணப் பணிகள் தீவிரம்!

Published:

pudukottai cm relief work - 2026

நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை; அமைச்சர்கள் பொய் சொல்கின்றனர் என்று குற்றம் சாட்டி இரு தினங்களுக்கு முன்னர் வன்முறையை வெளிப்படுத்திய புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளத்தில் இன்று முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட அந்த இடங்களில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் புயல் பாதிப்புகளை பார்வையிட்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதுக்கோட்டை நகராட்சி மாப்பிள்ளையார்குளத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும், உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியினையும் வழங்கினார்.

புதுக்கோட்டை நகராட்சி, மச்சுவாடியில் “கஜா புயலால்” பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு செய்தார். #TNGovt #GajaCyclone

Related articles

Recent articles

spot_img