மேகேதாட்டு விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்: ஜி.கே.மணி

Published:

gkmani - 2026

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்க்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை என்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டினார்.

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பா,ம.க செயற்குழு கூட்டத்திற்கு சிரப்பு அழைப்பாளராகவும் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு கட்சி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிடவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி நாமக்கல் மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கரூர் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் சிறப்பன வரவேற்பு அளிக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தின் பா.ம.க ஆணி வேரான புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை மற்றும் அச்சமாபுரம் பகுதிகளில் பா.ம.க கொடியேற்றினார்.

அப்போது மாற்றுக்கட்சியில் இருந்து பலர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.கவில் இணைந்தனர். தொடர்ந்து அவர் பாமக.,வினரின் இல்லங்களுக்குச் சென்று, குடும்பத்தினருடன் அளவளாவினார். பின் கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் ஏற்ப்பாடு செய்யப்படிருந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, புதிய நிர்வாகிகளுக்கு வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தளில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டி கஜா புயல் கடுமையான பாதிப்பை உண்டாகியுள்ளது குறிப்பாக நாகை , தஞ்சாவூர் , கடலூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  மாநில அரசு நிவாரண பணிகளை  மேற்கொண்டு வருகிறது என்றாலும், பொதுமக்கள் இன்னமும் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

கஜா புயலால் கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் தோகைமலை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழை , நெல் பயிர்கள் பாதிக்கப்படுள்ளது  அவற்றுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை

கடந்த காலங்களில் மேட்டூர் அணை நிரம்பிய போது ஈரோடு கரூர் நாமக்கல் பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டியிருந்தால் தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதை தவிர்த்திருக்கலாம்.

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுக்க அனுமதித்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை; தமிழ்நாட்டிற்கு அநீதி நடவடிக்கை என்றார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகத்தான் தமிழக மக்கள் பார்கின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நீர் வள ஆணைய தலைவரால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை திரும்பப்பெற்று தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. முன்னதாக 2014ல் 2015ல் இரண்டு சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு அதனை கண்டு கொள்ளவில்லை அதனைப் போலவே இந்தத் தீர்மானம் உள்ளது. அதனால் தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்,

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அனைத்து கட்சி தலைவர்களையும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தில்லி சென்று தமிழகத்தின் உரிமையை காத்திட வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்திற்க்கு சென்று போர்க் கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related articles

Recent articles

spot_img