16 June04 anna university - 2026

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் முன்னரே வினாத்தாள் வெளியானதன் காரணமாக கடந்த 3 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எம்.கே. மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் தமது உறவினர் மூலம் வினாத்தாளை சுரேஷ்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். அதை தமது நண்பர் ஹரிகிருஷ்ணனிடம் அவர் பகிர்ந்துள்ளார். ஹரிகிருஷ்ணன், அதை தமது பிற நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். இவ்வழக்கில், வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக,

கேள்வித்தாளை விற்பனை செய்தவர் பல்கலை. தற்காலிக ஊழியர் காஞ்சனா என தகவல். வெளியாகியுள்ளது.

தலைமறைவாகியுள்ள காஞ்சனாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்நிலையில், இத்தகைய ரகசிய பணியில் தற்காலிக ஊழியரை நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை.யில் 500 பேர் தற்காலிக பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending