ஆளுநர் உரை ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர்: டிடிவி தினகரன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
ttv dinakaran - 2026

ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் பன்வாரிலால் உரை என்று கூறியுள்ளார் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது கலந்து கொண்ட டிடிவி தினகரன் ஆளுநர் உரை குறித்து தமது கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்,

பேரவையில் ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

ஆட்சி சிறப்பாக நடப்பதாக ஆளுநர் உரையாற்றி இருப்பது உண்மைக்கு மாறாக உள்ளது …

பல பிரச்சனைகளில் மாநில உரிமை பாதிப்பு என்று ஆளுநரே கூறியிருக் கிறார் என்று கூறினார் தினகரன்.

ஓபிஎஸ் தான் ஜெயலலிதா சிகிச்சையில் தவறு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் பேசுகின்றனர்.

அமைச்சர்களை அழைத்து விசாரிக்க வேண்டிய காலம் வரும்… என்றார் .

மேலும் அ.ம.மு.க திருவாரூர் வேட்பாளர் ஜன.4-ல் அறிவிக்கப்படுவார் என்று கூறிய டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள் அடிக்கடி தில்லி செல்வதன் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தலுக்காக ஜெயலலிதாவின் பெயரை அதிமுகவினர் பயன்படுத்துகின்றனர் என்று சட்டப்பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.