பாலுக்கு பதிலாக பால்கோவா பிரசாதம்..! அறநிலைய துறை அதிகாரிகளுக்கு ‘அல்வா’ வழங்கும் போராட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
hmk thirunageswaram - 2026

திருநாகேஸ்வரம் ஸ்ரீராகு தலத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டிய அபிஷேக பாலுக்கு பதிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை பிரசாதமாக திருக்கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.

இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப் பட்டது.

பக்தர்களுக்கு அபிஷேகப் பால் வழங்குவதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்பொழுதும் போல பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேகப் பால் வழங்குங்கள் என்று பல முறை மனுக்கள் கொடுக்கப் பட்டன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் இருந்தனர்.

இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடத்தப் பட்டது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் இப்போது பிரசாதமாக பால்கோவா வழங்கப் படுகிறது. இனிவரும் காலங்களில் பிரசாதமாக அல்வா கூட கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பக்தர்களையும், பொதுமக்களையும் ,
விழிப்படையச் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு “அல்வா கொடுக்கும் அறப்போராட்டத்தை நடத்தியது.

அல்வாவுடன் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தினர். காரணம் கேட்டதற்கு அல்வாவோடு ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றார்கள்.

அப்படியானால் பால்கோவாவை பக்தர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ? என்று அவர்கள் கேட்டபோது, காவல்துறை பதில் ஏதும் சொல்லவில்லை. எனவே, அதிகாரிகளின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குடந்தை D.குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.