தென்காசியை மாவட்டமாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? ஆய்வு நடத்த உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
tenkasi district - 2026

நெல்லை மாவட்டம், தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டத்தை உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி நெல்லை மாவட்ட கலெக்டருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். –

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி கோட்டத்தை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதை ஏற்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், திருநெல்வேலி ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்து விரைவில் அறிக்கை அனுப்புங்கள்’ என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.