முத்தலாக் முறையை ரத்து செய்ய… இத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளது இந்தியாவுக்கு..!

Published:

triple talaq bill reintroduced in Rajya Sabha copy - 2026முத்தலாக் நடைமுறை 1,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்! ஆனால் பல முஸ்லிம் நாடுகள் இதை தடை செய்துள்ளன.

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றிய பின்னர், இந்தியா, செவ்வாய்க் கிழமை அன்று இந்த நடைமுறையை குற்றச் செயல் ஆக்குவதற்கு ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளது.

முத்தலாக் தடைச் சட்டத்தின் மூலம், ​முஸ்லிம் சமூகத்தின் பெண்களின் அதிகாரம் மற்றும் நலனில் அக்கறை கொண்டு இருப்பதாக மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறியது. இந்த மசோதாவை மத அரசியல் ரீதியில் மூலம் பார்க்கக் கூடாது என்றும் அது கூறியது. பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த நடைமுறை தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு வாதமாக முன்வைக்கப் பட்டது.

இந்நிலையில், எந்த முஸ்லிம் நாடுகளில் எல்லாம் மூன்று முறை தலாக் சொல்வதன் மூலம் விவாகரத்து கோரும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

triple talaq - 2026இஸ்லாத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் சவுதி அரேபியா, மிகவும் பழமைவாத நாடு என்று அறியப்படுகிறது, இங்கும் இந்த நடைமுறைக்கு தடை உள்ளது. 1961 இல் முஸ்லீம் குடும்ப சட்டம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

பங்களாதேஷ், மலேசியா, அல்ஜீரியா, ஜோர்டான், ஈராக், புருனே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, குவைத் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளும் முஸ்லீம் நாடுகளில் அடங்கும்.

tripletalaq - 20261929 ஆம் ஆண்டில் இந்த நடைமுறையை தடைசெய்த முதல் நாடு எகிப்து. ஆப்கானிஸ்தானில் ஒரே ஒரு அமர்வில் இருந்து கொண்டு முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரமுடியாது.

Related articles

Recent articles

spot_img