10 சத இடஒதுக்கீடு; திமுக.,வுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் சமுதாயங்கள்!

உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்
dmk stalin thirukuvalai - 2026

பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் நெல்லையில் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து முற்பட்டோர் நலச்சங்க கூட்டம் நடைபெறுகிறது

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் அனைத்து முற்பட்டோர் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நெல்லை ஜங்ஷன் ராம் மஹாலில் பிப்ரவரி 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது

கூட்டத்தில் முற்படுத்தப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்த மேற்பட்டோர் சமுதாயமும் வரவேற்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு நன்றி தெரிவித்தும், இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

எனவே நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது ஒற்றுமையை அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் பகவதி முத்து என்ற புளியரை ராஜா தெரிவித்தார்!

இதனிடையே, சமூக வலைத்தளங்களில், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தும் செயல்பட்ட திமுக.,வுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி, திமுக.,வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவருகின்றனர்.

இதனை வெளிப்படுத்தும் ஒரு டிவிட்டர் பதிவில்… @Uk_Twittzதலைவர்கள் எவ்வழியோ தொண்டர்களும் அதே வழி.தொடரும் தவறுகள்.ஜனநாயகம் இங்கே மறுக்க படுகிறது.அடிப்படை உரிமைகளும் மறுக்க படுகிறது.ஒரு ஹிட்லர் இந்தியாவை ஆண்டு ஜாதிகளை அழித்தால்தான் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி பரவாக்கோட்டை கிராமத்தில் அகமுடையார் மக்கள் சூழ்ந்து கேட்ட கேள்விகளும், ஒரு இளைஞரை திமுக.,வினர் மிரட்டுவதுமான வீடியோ வைரலானது!

https://twitter.com/Uk_Twittz/status/1088731035246850049

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.