12 வயது சிறுமி தற்கொலை!

Published:

Jeyanthi - 2026

12 வயது சிறுமி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் மோகனபுரி 4 ஆவது தெருவை சார்ந்தவர் வெங்கம்மா. இவர் தனது கணவரை பிரிந்து வசித்து வரும் நிலையில், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஜெயந்திக்கு 12 வயதாகும் நிலையில், அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் ஜெயந்தியும், அவரது அண்ணனும் மட்டும் இருந்த நிலையில், வீட்டில் ஒரேயொரு அறை இருப்பதால், ஜெயந்தி தான் துணி மாற்ற வேண்டும் என்று கூறி தனது அண்ணனை வெளியே அனுப்பியிருக்கிறார்.

வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த அண்ணன், தனது தங்கை நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் கதவை தட்டி பார்த்துள்ளார்.

அப்போது, தங்கையின் குரல் கேட்காததால் பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே செல்கையில், ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

அவரை உடனடியாக மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே, ஜெயந்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில், ‘ கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக தான் ஜெயந்தி பருவமடைந்தார் என்றும், தற்போது மாதவிலக்கு நாள் என்பதால் வயிற்று வலியின் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் ‘ என்றும் என்பது தெரியவந்துள்ளது.

அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது

Related articles

Recent articles

spot_img