டி.எம்.எஸ். – வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி!

Published:

modi coimbatore - 2026

திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்திருந்தனர்.

திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img