December 6, 2025, 4:13 PM
29.4 C
Chennai

ராணுவ வீரர்க்கு வீரவணக்க போஸ்டர்… யாரைக் கேட்டு ஒட்டினாய்? புகார் அளித்தவரை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர்! செங்கோட்டையில் அதிர்ச்சி!

sengottai posters - 2025

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரைக்கேட்டு போஸ்டர் ஒட்ட வேண்டும்?! கட்டாயம் போலீஸாரிடம் கேட்டுவிட்டு… இங்கே ஒட்டலாமா? இந்த இந்த வாசகங்கள் இடம் பெறலாமா? இப்படி ஒட்டலாமா? இப்படி போஸ்டர் அடிக்கலாமா? ராணுவம் என்ற வார்த்தை போடலாமா? பயங்கரவாதி தாக்குதல் என்று போடலாமா? இல்லை இஸ்லாமிய இயக்கங்கள் அச்சடித்து ஒட்டியது போல்… தாங்களே குண்டு வைத்து இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் என்று போட்டு அஞ்சலி செலுத்த வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மதவெறி இயக்கங்கள் அச்சடித்து ஒட்டியது போல்… ‘மோடியின் சதிக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு’ வீரவணக்கம் என்று போஸ்டர் அச்சடிக்க வேண்டுமா என்பதையெல்லாம் தீர்மானிக்கும் நிலையில் இருப்பவர்கள் காவல் அதிகாரிகள்! அத்தகைய அதிகாரிகளிடம் கேட்காமல் போஸ்டர் அடித்து ஒட்டினால்… இப்படித்தான் கேட்பார்கள்!

எப்படி..? தனக்கு நேர்ந்த அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறார் செங்கோட்டை நகர வி.எச்.பி.,யைச் சேர்ந்த முருகேசன்.

பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தாக்குதலில் இந்திய துணை பாதுகாப்பு படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. நாடெங்கிலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டை நகரிலும் வீர வணக்கம் சொல்லி போஸ்டர் அடித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒட்டியிருந்தார்கள் விஎச்பி அமைப்பினர்.

போஸ்டர் ஒட்டியிருந்த பகுதியும், தனியார் ஹிந்து ஆலயத்திற்கு சொந்தமான கோயில் கட்டடம். அந்த இடத்தின் முன்னே திமுக அதிமுக மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எல்லாம் வைக்கப் பட்டிருக்கின்றன! ஆனால் அந்த இடத்தில் நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கு மரியாதை தெரிவித்து வீரவணக்கம் செலுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டது பலரது கண்ணை உறுத்தியுள்ளது. இரவோடு இரவாக விஷமிகள் சிலர் கிழித்துள்ளனர்

போஸ்டரை கிழித்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், எவரையும் குற்றம் சொல்லாமல், ஒட்டப் பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிந்த நிலையில் இருப்பது குறித்தும் விசாரிக்குமாறும் ஒரு புகார் கொடுக்க விஎச்பி.,யினர் செங்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கே இருந்த உதவி ஆய்வாளர் மாதவன், புகார் கொடுக்கச் சென்றவர்களை மிரட்டி, யாரைக் கேட்டு போஸ்டர் ஒட்டினாய்? போஸ்டர் ஒட்ட வேண்டியது, பிறகு கிழிச்சிட்டான்னு வந்து புகார் கொடுக்க வேண்டியது என்று அலட்சியமாக பதில் சொன்னதுடன், புகார் கொடுக்க வந்தவர்களை மிரட்டி, அவர்களை ஒருமையில் தரக்குறைவாக திட்டியதுடன், அடிக்கவும் பாய்ந்துள்ளார். இருப்பினும், அவரது புகாரை ஆய்வாளர் வாங்கி வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இதை அடுத்து தங்களைத் தரக்குறைவாக பேசிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தென்காசி டிஎஸ்பி அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர் விடுப்பில் இருந்ததால், இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து மனு எழுதிக் கொடுத்துள்ளனர்.

vhp nellai complaint e1550476271522 - 2025
நெல்லையில் விஎச்பி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கச் சென்றனர். முன்னதாக காவல் துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்…

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நேற்றுடன் உதவி ஆய்வாளர் மாதவன் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் ஆகியுள்ளார். குற்றாலம் காவல் நிலையத்தில் இருந்து ஓரிரு மாதம் முன்னர்தான் செங்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றமாகி வந்த மாதவன், மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டதில், கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தகாத முறையில் திட்டியதும், அடிக்கப் பாய்ந்ததும் புகார் கொடுக்க வந்த விஎச்பி நகர செயலர் ஏ.முருகேசன் உள்ளிட்டோரை பெரிதும் வருத்தமடையச் செய்ததாகவும், அதனாலேயே புகார் கொடுக்க டிஎஸ்பி அலுவலகம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வீரர்களுக்கு வீரவணக்கம் சொல்லி போஸ்டர் ஒட்டியது மாபெரும் தவறா? போஸ்டர் ஒட்டியது தேசத் துரோகச் செயலா? அல்லது போஸ்டரை கிழித்தது தேசத் துரோகச் செயலா? என்பதை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் தங்களுக்குள் கலந்தாலோசித்து தீர்மானமாகக் கூறவேண்டியதுதானே என்கின்றனர் புகார் கொடுக்கச் சென்றவர்கள்!

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர் செங்கோட்டை வி.எச்.பி., நகர செயலாலர் முருகேசன் மற்றும் சிலர். அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். புகார் மனு அளித்ததற்கான ரசீதும் பெற்றனர்.

nellai sengottai petition - 2025

ஏ.முருகேசன் அளித்த புகாரில்,

ராணுவ மாவீரர்களுக்கான வீரவணக்க சுவரொட்டி சேதப்படுத்தியது சம்பந்தமாக…
செங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தரக்குறைவாக பேசியது தொடர்பாக புகார்

ஐயா வணக்கம் மாவீரர்களுக்கு வீர வணக்கம் என்கிற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் விஹெச்பி பஜ்ரங்தள் சார்பில் செங்கோட்டையில் நேற்று ஒட்டப்பட்டது! அதை சில பயங்கரவாதிகள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து ஒன்று திரண்டு செங்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம்! அப்போது செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் குமார் என்பவர், புகார் கொடுக்கச் சென்ற எங்களிடம் யாரைக் கேட்டு சுவரொட்டிகள் ஒட்டினீர்கள் என்று கேட்டு மிரட்டினார்!

அதற்கு நாங்கள் இந்த தேசத்திற்காக பாதுகாப்பு வீரர்கள் பலியாகியிருக்கின்றனர் எனவேதான் ஓட்டினோம் என்று கூறியதை அடுத்து உடனிருந்த செங்கோட்டை உதவி ஆய்வாளர் திரு மாதவன் அவர்கள் எங்களைப் பார்த்து டேய் செருக்கியுள்ள… இங்கே இருந்து போயிரு உன் மூஞ்சி மொகரைய உடைக்க வா எனஒருமையிலும் மிக ஆபாசமாகவும் பேசினார்

தேசத்திற்காக பலிதானமான நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சுவரொட்டி ஒட்ட முடியாத நிலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்! இந்த அராஜகப் போக்கு தொடருமேயானால் பாரதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று கோரியுள்ளார்.

  • அ. முத்துராமன், நெல்லை செய்தியாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories