தாம்பரம் – நெல்லை அந்த்யோதயா எக்ஸ்ப்ரஸ் நாகர்கோயில் வரை நீட்டிப்பு!

Published:

andhyodayatrain - 2026

தாம்பரம் -நெல்லை அந்த்யோதயா ரயில் இனி நாகர்கோயில் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தாம்பரம் திருநெல்வேலி தாம்பரம் தினசரி அந்தியோதயா விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய கேட்டுக் கொண்டதன் பேரில் ரயில்வே அமைச்சகம் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது

அதன்படி தற்போது மாலை 5 15க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9 45 க்கு தாம்பரம் சென்றடைந்து, மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி வந்து கொண்டிருந்த இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை ஒன்பது 45க்கு தாம்பரத்தை சென்றடையும்

மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 45க்கு நாகர்கோவில் வந்தடையும் இதற்கான துவக்க நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img