இன்று மாலை 6 மணியுடன் ஓவர்..! சமூக வலைத்தளங்கள் மூலமும் கூடாது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

satyabrata sahoo - 2026

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவு பெறுகிறது!

மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது; மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது! வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்

தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது;

இடைத்தேர்தல் அறிக்கவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நாளை (ஏப்.,16) மாலை 6 மணிக்கு முடிவடைவதால் தேர்தல் முடியும் வரை இந்த 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யக் கூடாது.

வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாத பிற தொகுதிகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் அந்தந்த தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

வேட்பாளர்கள் எந்த காரணத்திற்காகவும் வாக்காளர்களை ஓட்டுப் போட ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு மொபைல் போன் எடுத்து வரலாம். ஆனால் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடையில்லை. நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது. தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் நடத்த கூடாது.

மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். சித்திரை திருவிழா காரணமாக மதுரை தொகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் விதிமுறைகள் அமலில் இருக்கும்.

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.132.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து ரூ.65.01 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை மூலம் ரூ.55.02 கோடி பணம் பறிமுதல் செய்யப்படும். எம்எல்ஏ விடுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை. இதுவரை ரூ.286 கோடி மதிப்புள்ள 998 கிலோ தங்கம், 642 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.