சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்: ரஜினி

rajini - 2026

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. மேலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மக்களவைக்கான வாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கும்போது டிவிட்டர் பதிவுகளில் ஒரு ஹேஷ் டேக் பிரபலமானது! அடுத்த ஓட்டு ரஜினிக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி இருந்தது

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

நேற்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற கேள்விக்கு, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்! அவர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார் ரஜினிகாந்த்!

இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் ரஜினிகாந்த் அதற்கு அளித்த பதில்களும்…

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

வாக்குப்பதிவு சென்ற முறை இருந்ததை விட இந்த முறை குறைந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்

அதற்கு 70 சதவிகிதம் வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்கு பதிவு தான்! சென்னையில் இருப்பவர்கள் மட்டும் நான்கு நாள் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டனர்! அதனால் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்து விட்டது என்றார்!

கடும் வெயிலில் மக்கள் மிகவும் அவதிப்பட்டார் இதனால் வாக்குப்பதிவு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார்களே என்று கேட்ட போது…

கண்டிப்பாக வாக்குப் பதிவு மையங்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் ரஜினிகாந்த்!

தேர்தலில் அதிகப்படியாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன என்று கேட்டபோது

அதற்கு தேர்தல் ஆணையம் கடந்த முறையைவிட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது! தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார்

வாக்குப்பதிவின் போது சில இடங்களில் வன்முறைகள் நடந்து உள்ளதாக தகவல் வெளியானதே என்று கேட்டபோது…

இல்லை கடந்த தேர்தல்களைப் ஒப்பிடும் போது குறைவான அளவில்தான் வன்முறை நடைபெற்றுள்ளது என்றார்

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு

மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும் என்றார் ரஜினிகாந்த்!

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தேர்தலில் சந்திப்பீர்களா என்று கேட்டபோது,

முடிவுகள் வரட்டும் அதன் பிறகு முடிவு செய்வோம் என்றார்

ஒருவேளை ஆட்சி மாற்றத்தில் தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது

சட்டமன்றத் தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறினார் ரஜினிகாந்த்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories