புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்; பொதுமக்கள் அதிர்ச்சி!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் நெல்லை

petrol bomb - 2026

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலப்பாட்டத்தைச் சேர்ந்தவா் கணேசன் இவா் பாளையங்கோட்டை அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் அங்கு சென்று பார்க்கையில் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதம் அடைந்திருந்தன. இதுதொடர்பாக அந்தப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீசார் சோதனை நடத்திய போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த புதிய வீட்டில் இருந்து மேலும் இரு நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கணேசனின் குடும்பத்தாரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

விசாரணையில் கணேசனின் இரு மகன்களான சிவா மற்றும் அருள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிவா, அருள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.புதிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுதி உள்ளது.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.