காலி மனையை விலைக்கு கேட்ட முதியவருக்கு;  கும்மாங்குத்து விட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் நெல்லை

theruttu 1 - 2026

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை அருகே உள்ள குலசேகரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன்(65). இவர் அதே பகுதியை சேர்ந்த வன்னியன் மகன் கணேசன்(40) என்பவருக்கு சொந்தமான காலி இடத்தை விலைக்கு கேட்டதாகவும் கணேசன் கொடுக்க மறுத்து பேச்சியப்பனிடம் தகாறு செய்துள்ளார்.

வாய்பேச்சு முற்றிய நிலையில் கைகலப்பில் ஈடுபட்டனா். இதையடுத்து கணேசன் மற்றும் அவரது நண்பரான வென்னி உடையார் மகன் ஜான்பாண்டியன்(35) ஆகிய இருவரும் பேச்சியப்பன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பேச்சியப்பன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த சேர்ந்தமரம் எஸ்.ஐ. உத்தரகுமார் வழக்குப் பதிந்து கணேசன் உள்ளிட்ட இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.