குளித்தலை – ஐயர் மலை கோயிலில் ரோப் கார் அமைக்கப் பணி: ஆணையர் ஆய்வு!

Published:

karur iyermalai - 2026

கரூர் அருகே ஐயர்மலை ரத்தினகீரீஸ்வரர் ஆலயத்தில் புதிய ரோப்கார் அமைக்கும் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு நடத்தினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஐயர்மலையில் 1017 படிக்கட்டுகளை கொண்ட ரத்தினகீரிஸ்வரர் திருக்கோவிலுக்கு பெரியோர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பக்தர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த மலைக்கு வரும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிகளுக்காக புதியதாக ரோப்கார் வசதி அமைக்க கடந்த 2011ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது வரை மந்தமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு நடத்தினார்.karur iyermalai2 - 2026

இனை ஆணையர் சுதர்சன். உதவி ஆனையர் சூரிய நாராயணன். தலைமை பொறியாளர் அறம் ஆகியோருடன் ஐயர்மலை உச்சிக்கே சென்று பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img