குன்னூரில் தேயிலைத் தோட்டத்தில் கரடி பரிதாபமாக உயிரிழப்பு!

Published:

coonur bear - 2026

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய கரடி வனத்துறை சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உபதலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் 3 கரடிகள் நடமாடி வந்தது. இந்தப் பகுதியில் விவசாய நிலங்களும், பழங்களும் அதிகளவில் உள்ளதால் அவ்வப்போது இந்த பகுதிக்கு வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்ல தொழிலாளர்கள் செல்லும் போது, 6 வயதுடைய பெண் கரடி ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அளித்தும் காலதாமதமாக வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்காக காலதாமதம் செய்ததால் 4 மணி நேரம் கரடி உயிருக்கு போராடி வந்தது.

தொடர்ந்து கரடியை மீட்டு சிகிச்சை அளிக்காததால், பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், வாயில் நுரையுடன் உயிரிழந்ததால், கரடிக்கு அருகில் உள்ள விவசாயம் நிலங்களில் விசம் வைத்ததார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மேலும், 3 கரடிகளில் ஒன்று உயிரிழந்த நிலையில், மீண்டும் இரு கரடிகள் அதே பகுதியில் உலா வருவதால், அந்த கரடிகளையும் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img