கல்யாணம் முடிஞ்ச கையோட… உயிர் காக்கும் பிரசாரம்! புது தம்பதிக்கு குவியும் பாராட்டு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

salem couple helmate - 2026 புதுமண தம்பதிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … அவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

புதுமண தம்பதிகளின் இந்த நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஹெல்மெட்டினால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு சார்பிலும் காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

அதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கீர்த்திராஜ் தனசிரியா தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது இந்த புதுமண தம்பதிகள் இருவரும் ஹெல்மெட் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதுமண தம்பதிகள் இருவரும் மணக்கோலத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்

மேலும் இவர்கள் சாலையில் செல்கின்ற பொழுது எதிரே வருகின்ற வாகன ஓட்டிகள் இடமும் இவர்களுக்கு அருகில் வருகின்ற வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும் படியும் ஹெல்மெட் அணிவதால் தங்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

salem couple - 2026மேலும் இந்த புதுமண தம்பதினர் மணகோலத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது .

மணமக்கள் இது குறித்துக் கூறுகையில் மனிதன் உயிர் மிகவும் விலை மதிப்பற்றது ஆனால் அந்த மனித உயிரினை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன செயல் தான் இந்த ஹெல்மெட்!

salem couple helmate1 - 2026ஹெல்மெட் என்பது மிக மிக அவசியமானது ஆகவே எங்களுக்கு திருமணம் முடிந்த அடுத்த பணியாகவே ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாகவும் நாங்கள் மணக்கோலத்தில் செல்வதால் குறைந்தது நாங்கள் சொல்லும் கருத்தினை 100 நபர்கள் ஆவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் திருமணம் முடிந்த நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாங்கள் மேற்கொண்ட ஆகவே ஒவ்வொருவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுமண தம்பதிகள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.