எழுத்தாளர் ஜெயமோஹன் மீது தாக்குதல்! கடைக்காரர் மீது புகார்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

jayamohan - 2026

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கன்னியாகுமரியில் மளிகைகடைகாரரால் தாக்கப்பட்டார். புளித்துப்போன மாவை கொடுத்தாக நடந்த தகராறால் கடைக்காரால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் ஜெகன்மோகன் புகார் தெரிவித்தார். அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் (60). தமிழ் மற்றும் மலையாளத்தில் எழுதிக் குவித்து வருகிறார். இணையதளத்தில் இவரது பக்கத்துக்கு தனி வாசகர் வட்டம் உள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளரான இவர் திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்

நேற்று இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது புளித்துப் போன மாவை வழங்கியது தொடர்பாக, மளிகைக் கடைக்காரருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருகே இருந்த ஒரு கும்பல், அவரை அடித்து உதைத்துள்ளது.

இதில் ஜெயமோஹன் காயமடைந்துள்ளார். இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜெயமோஹன், ஆசாரிப் பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.