கோயில் கல்வெட்டு தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Published:

temple kalvettu - 2026

கோவில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவு பிறப்பித்தது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

temple - 2026அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன! அவற்றில் கோயில்களில் சிறப்பு வரலாறு, அப்போதைய சூழ்நிலைகளில் நடைபெற்ற போர்கள், சமாதான உடன்படிக்கைகள் இவை குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றை மக்கள் அறியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வெட்டு தகவல்களை தொகுத்து அந்தந்த தலங்களில் வெளியிட்டால் தமிழர்களின் வரலாறு குறித்து அறிய பேருதவியாக அமையும்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மேலும் கல்வெட்டுகளில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் வாய்ப்பாக அமையும்!

mannarkoil periyanambi - 2026
வேதபுரி மன்னார்கோவில் ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை – பெரியநம்பி நரசிம்ம கோபாலன்.

தமிழர்களின் வரலாறு பழமையானது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் கோயில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிட்டால் அதற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும் என்பதுடன் தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்

இதுகுறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடவும் அவற்றை கோயில் வளாகங்களில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது! அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் அரசு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img