திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல! ஸ்டாலின் இருந்த பதவியில் உதயநிதி!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

udayanidhi e1524026832498 - 2026

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் சாமிநாதனை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக திமுக சட்டதிட்ட விதி, 18, 19 பிரிவுகளின் படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.


திமுக.,வின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது இளைஞரணி செயலாளர் பதவி!  தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையான மு.கருணாநிதியால் அறிவிக்கப் பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர் அணிச் செயலர் பதவியில் இருந்து வந்தார். 60 வயது நெருங்கிய போதும் இளைஞர் அணியில் செயலராக இருந்துவந்த ஸ்டாலின், பின்னர் அந்தப் பதவியில் இருந்து விடுபட்டு, இப்போது திமுக., தலைவர் ஆக உள்ளார்.

dmk banner - 2026

இந்நிலையில், தற்போதைய திமுக., தலைவரும் முன்னாள் இளைஞர் அணிச் செயலருமான மு.க.ஸ்டாலின், தனது மகனை தற்போதைய இளைஞர் அணிச் செயலராக நியமித்துள்ளார். முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்! 41 வயதாகும் உதயநிதி தற்போது இளைஞர் அணிச் செயலராக தனது தந்தை இருந்த பதவியில் அமர்ந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வாரிசு அரசியல் கோலோச்சும் குடும்பக் கட்சியாக திமுக., உள்ளது என்ற குற்றச்சாட்டு அதன் மீது முன்வைக்கப் படுகிறது. முன்னர் திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அதன் தலைவராக இருந்த கருணாநிதி கூறியிருந்தார். அதனை தற்போது திமுக., அறிவாலயம் நிரூபித்திருக்கிறது என்கிறார்கள்.

சங்கரமடத்தில், ரத்த சொந்தம் இருக்கும் எவரும் அடுத்த மடாதிபதி ஆக வர முடியாது. சங்கரமடத்தில் மடாதிபதியாக இருக்கும் ஒருவரின் ரத்த சொந்தங்கள் எவரும் மடத்தின் பணிகளில் இருக்க முடியாது. அதே நேரம், மடத்தில் அடுத்த மடாதிபதியாக வர இருப்பவரை முன்னரே உள்ள மடாதிபதி தேர்ந்தெடுத்து, அவருக்கு மடாதிபதிக்கான பயிற்சியைக் கொடுத்து, தனக்குப் பின் பட்டம் சூட்ட தயார் செய்து வைப்பார். இதில், தன் சொந்தக்காரர் எவரையும் மடாதிபதியாகவோ, மடத்தின் முக்கியப் பொறுப்புகளிலோ ஒரு மடாதிபதி நியமனம் செய்ய இயலாது.

அதே நேரம், அறிவாலய மடத்துக்கு மடாதிபதியாக உள்ளவர், தன் வாரிசை அடுத்த மடாதிபதியாக, தான் இருந்த இடத்துக்கு தேர்வு செய்ய இயலும். அதைத்தான் சூசகமாக மு.கருணாநிதி, திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அன்றே கோடிட்டுக் காட்டினார் என அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டுகிறார்கள்!

1 thought on “திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல! ஸ்டாலின் இருந்த பதவியில் உதயநிதி!”

  1. அறிவாலய மடத்தை, சங்கர மடத்துக்கு நிகராக ஓப்பிடலாமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.