தமிழக ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்……!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம்

subrem court - 2026நக்கீரன் கோபாலுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு,இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன்கோபால் மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் நக்கீரன் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

nakkerangopal 1 - 2026

இதனிடையே சம்மனை ரத்து செய்யக் கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் நக்கீரன் கோபால் உள்பட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது,

நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய – மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.

எழும்பூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்ய வேண்டும் எனவும், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து , விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நக்கீரன் கோபால் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.