காமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு!

Published:

sasthrigal complaint 1 - 2026

காமநெடி நடிகர் சந்தானம் மற்றும் ஏ1 படத்தை இயக்கிய, கதை வசனம் எழுதிய, தயாரித்த ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

A1 என்கிற சந்தானம் நடிக்கிற படத்தின் கதை … பிராமண வீட்டு பெண் முட்டை ஆம்லேட் சாப்பிட்டு தனது காதலை சொல்லும் கதை என்றும், தோப்பனார் அதைக் கண்டு மயக்கம் என்றும் இந்து சமய சிறுபான்மைப் பிரிவினரான பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்தும் வகையில் ஒரு டீசர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஊடகவாசிகள், இது போல், வேற்று மத பெண் ஒருவர், பன்னிக்கறி சாப்பிட்டு தனது காதலை சொல்லும் கதை என்று youtubeல் கூட போட முடியுமா? அதற்கு தில் இருந்தால், சந்தானத்தின் இந்த செயலை ஏற்கிறோம்! முதலில் சந்தானம் அதுபோல் ஒரு வசனத்தையும் காட்சியையும் வைத்துவிட்டு, பிறகு கருத்துச் சுதந்திரம் குறித்து பேசட்டும். அதற்கு வக்கில்லை என்றால், சந்தானம் தான் ஒரு அலி என்று ஒப்புக் கொண்டதாகவே நாமும் கருத வேண்டியிருக்கும் என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்.

a1 a - 2026மேலும், இந்தப் படத்தை தடுக்காவிட்டால், சென்னை ரயில் நிலையத்தில் சுவாதியின் கழுத்தை அறுத்ததைப் போல மேலும் பலரது வீட்டுப் பெண்களுக்கும் நடக்கும்; அதையும் வேடிக்கை பார்க்குமா இந்த சமுதாயம் என்று வருத்தத்துடன் கருத்து பகிர்கிறார்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

a1 b - 2026சமூகத்தில் பதற்றத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கினால் அரசும் அதே ரகத்தையே சேரும் என்றும், அமைதியை விரும்பும் சமுதாயத்தின் பிரிவினரை இது போல் மீண்டும் மீண்டும் கேவலப்படுத்தியும் கேலி செய்தும் திரைத்துறையினர் ஈடுபடுவதை தடுக்க லாயக்கில்லாத கையாலாகாத்தன அரசு என்றுதான் வரலாற்றில் பதிவு செய்யப் படும் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே, ராமசுப்பிரமணிய சாஸ்திரிகள் இது குறித்து நடவடிக்கை கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img